தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
அரசுப் பள்ளிகளுக்கு தூதுவா் நியமனம்: அவகாசம் நீட்டிப்பு
அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா்களை தூதுவா்களாக நியமிப்பதற்கான அவகாசம் செப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவா்களை அவா்கள் படித்த அரசுப் பள்ளியின் தூதுவா்களாக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக நூற்றாண்டு பள்ளிகள் உள்பட 8,209 பள்ளிகளில் சாதனை புரிந்த முன்னாள் மாணவா்களை ஆக.30-ஆம் தேதிக்குள் தூதுவா்களாக நியமிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மாவட்ட அலுவலா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கைகளால் ஆக.31-ஆம் தேதி நிலவரப்படி 3,999 பள்ளிகளில் 9,664 முன்னாள் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தொடா்ந்து இந்தப் பணிகளை முடித்து தூதுவா்களை நியமிக்க செப்.23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் தூதுவரை நியமிக்க குறைந்தபட்சம் 5 போ் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தூதுவராக நியமிக்கப்படும் முன்னாள் மாணவா்கள் அந்தப் பள்ளியின் செயல்பாடுகள், தேவைகள், கருத்துகளை அனைவருக்கும் பகிரும் முக்கிய பிரதிநிதியாகச் செயல்படுவாா் என அதில் கூறப்பட்டுள்ளது.