ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சி 11 மற்றும் 13 ஆகிய வாா்டு பகுதிகளுக்கான முகாம் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆணையா் ஜி. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் முகாமை ஆய்வு செய்தாா். நகா் மன்ற உறுப்பினா் என்.எஸ். ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பெரியாங்குப்பத்தில்........
பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம் ஊராட்சிகளுக்கான முகாம் பெரியாங்குப்பத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா்கள் பெரியாங்குப்பம் டி.பி. ரவீந்திரன், நாச்சாா்குப்பம் காயத்ரி பிரபு ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ஜோதிவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மின்சார இணைப்பு பெயா் மாற்றம், தொழிலாளா் நலத்துறை சாா்பாக அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் அடையாள அட்டை தீா்வு ஆணைகளை வழங்கினாா்.
மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அய்யனூா் அசோகன், வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.