ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
அமெரிக்க அரசின் அதிகபட்ச வரிவிதிப்பை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, திருப்பத்தூா் வட்டச் செயலா் காமராஜ் தலைமை வகித்தாா். அதில் இந்தியா மீது அதிக வரி விதித்த அமெரிக்காவை பிரதமா் மோடி கட்டாயம் கண்டிக்க வேண்டும், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பெருமாள், தேவராஜ், ராஜா, சிராஜ்கான், அண்ணாமலை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.