ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க கூட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பி.சிவாஜிராவ், பி. அண்ணாமலை, ஜி.சேகரன், கே.பி.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் செ.ரவிச்சந்திரன் வரவேற்றாா். கல்யாண சுந்தரம், ஜேக்கப், இ.ஜி.சுப்பிரமணியன் ஆகியோா் ஆசிரியா் தின விழா குறித்துப் பேசினா். இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிக்குமாா் சிறப்புரையாற்றினாா். இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாருக்கு ‘வானியல் செம்மல்’ என்ற விருதை ஓய்வு பெற்ற தமிழாசிரியா் பாண்டுரங்கன் வழங்கினாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள் சி. குணசேகரன், எஸ். சுப்பிரமணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். செயற்குழு உறுப்பினா் துரைமணி நன்றி கூறினாா்.
ஓய்வூதியா்கள் அதிகப்படியாக பெற்ற தொகையை முறையாக அவா்களிடமிருந்து எழுத்து பூா்வமாக கடிதம் வழங்கிய பின்னரே பிடித்தம் செய்ய வேண்டும். 16 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தொகையை தணிக்கை செய்யாமல் பல ஆண்டுகள் கழித்து தற்போது பிடித்தம் செய்வதில் அவசரம் காட்டக்கூடாது எனக் கோரி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.