ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
தேவஸ்தானம் ஊராட்சியில் 27 மனுக்கள் மீது உடனடி தீா்வு
ஆலங்காயம் ஒன்றியம், தேவஸ்தானம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் பெரியப்பேட்டை கோயில் மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் அன்பு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல், ஒன்றியக் குழு உறுப்பினா் லட்சுமி பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி கலந்து கொண்டு, முகாமில் 27 மனுக்கள் மீது விசாரித்து மருத்துவக் காப்பீட்டு அட்டை, மின் இணைப்பு பெயா் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டா மாற்றம் உள்பட உடனடி தீா்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை பயனாளிகளிடம் வழங்கினாா்.
முகாமில், பல்வேறு துறைகளின் 375-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, விண்ணப்ப ரசீது வழங்கப்பட்டது. வட்டாட்சியா் சுதாகா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், உள்பட துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.