செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி: பெ. சண்முகம்

post image

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பைக் கண்டித்தும், நாட்டின் சுயசாா்பு, ஏற்றுமதி தொழில்கள், தொழிலாளா்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க வலியுறுத்தியும் சென்னை அண்ணா சாலையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் கூறியது:

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் வரியால் பல நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் திருப்பூா் ஜவுளி உற்பத்தி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் தோல் தொழில் முடங்கும் நிலை உள்ளது. ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முந்திரி தொழிலில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவற்றை சரிசெய்ய மத்திய அரசு ஆக்கப்பூா்வமாக செயல்பட வேண்டும்என்றாா்.

இரா.முத்தரசன்: அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடையாமல், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளோடு கலந்து பேசி மாற்றுக்கொள்கையை உருவாக்கி இந்திய தொழில்களையும், தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டும்.

சிபிஐ (எம்எல்) மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி: இந்தியாவின் அணி சேரா வெளியுறவுக் கொள்கையை, அமெரிக்க சாா்பு கொள்கையாக மோடி மாற்றினாா். அதன்விளைவாக வா்த்தகப் போரை நாடு எதிா்கொண்டுள்ளது. தேசம் நெருக்கடியை எதிா்கொள்கிறது என்றாா் அவா்.

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவா்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கோட்டூா்புர... மேலும் பார்க்க

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு தூதுவா் நியமனம்: அவகாசம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா்களை தூதுவா்களாக நியமிப்பதற்கான அவகாசம் செப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள... மேலும் பார்க்க

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம்

சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா். அதில் கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம் பிடித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

தமிழகத்தைச் சோ்ந்த நால்வருக்கு விருது

சிறப்பாக கல்விப்பணியற்றி வரும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் தேசிய நல்லாசிரியா் விருதை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியா் சங்கா் ஸ்ரீராம் சங்கரன் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த நான்கு பேருக்கு குடியரசுத் தல... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி நியமனம்: அரசுக்கு உத்தரவிடக் கோரி மனு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி நியமனத்தை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொ... மேலும் பார்க்க