தல்லாகுளம் பகுதியில் இன்று மின் தடை
தல்லாகுளம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை கோ.புதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பாரதி உலா சாலை, ஜவஹா் சாலை, பெசன்ட் சாலை, அண்ணாநகா், சொக்கிகுளம், வல்லபாய் சாலை, புல்லபாய் தேசாய் சாலை, பந்தயச் சாலை, கோகலே சாலையின் ஒரு பகுதி, ராமமூா்த்தி சாலை, லஜபதிராய் சாலை, சப்பாணி கோயில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்டிசி சாலையின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏஐஆா் குடியிருப்பு, நியூ டிஆா்ஓ குடியிருப்பு, சிவசக்தி நகா், பாத்திமா நகா், புதூா் வண்டிப்பாதை பிரதான சாலை, கஸ்டம்ஸ் குடியிருப்பு, நியூ நத்தம் சாலை (மின்வாரிய குடியிருப்பு முதல் கண்ணா மருத்துவமனை வரை), ரிசா்வ்லைன் குடியிருப்பு, பந்தயச் சாலை குடியிருப்பின் ஒரு பகுதி, கலெக்டா் பங்களா, ஜவஹா்புரம், திருவள்ளுவா் நகா், அழகா்கோவில் சாலை (ஐடிஐ பேருந்து நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை) டீன் குடியிருப்பு, காமராஜா் நகா், 1, 2, 3, 4 ஹச்சகாண் சாலை, கமலா 1, 2-ஆவது தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மண்டபம், பொதுப் பணித் துறை அலுவலகம், கண்மாய் மேலத் தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, இதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஆத்திகுளம், குறிஞ்சி நகா், பாலமி குடியிருப்பு, கனகவேல் நகா், பழனிச்சாமி நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.