செய்திகள் :

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

post image

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஆகஸ்டில் 58.6-ஆக இருந்தது. ஆனால், அது செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது. பின்னா் அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5-ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது. பின்னா் ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4-ஆக அதிகரித்த அது, ஜூலையில் 59.1-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 62.9-ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இதன்மூலம், தொடா்ந்து 40-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், துறைக்கு சாதகமான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

புதுதில்லி: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி வெள்ளிக்கிழமையன்று, அனைத்து தவணைக் காலங்களிலும் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.ஆட்ட... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடந்து வெளியேற்றம் மற்றும் இந்தியாவிற்கு அமெரிக்க கூடுதலாக வரிகள் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக, இன்றைய வர்த்தக அமர்வில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்த... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்த நிலையில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் சரிந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முந்தைய முடிவில் இருந்து மாற்ற... மேலும் பார்க்க

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் பைக் அறிமுகம்! ரூ.12.99 லட்சத்தில்..!

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் லைன் - அப் பைக் வரிசைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகள் 8 விதமான மாடல்களில் வெளியாகியுள்ளன. 100 க்கும் மேற்பட்ட அக்ஸசரிஸ்களுடன், 3 விதமான ரிம... மேலும் பார்க்க

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலைய... மேலும் பார்க்க

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் என்டார்க் 150 ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது.இதுவரை இல்லாத வகையில் மிகவும் பவர்ஃபுல் ஸ்கூட்டராக வெளியாகியுள்ள என்டார்க் 150 ... மேலும் பார்க்க