ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு
முழு சந்திர கிரகணத்தையொட்டி, வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணம் ஏற்படுவதையொட்டி, ஸ்ரீபுரம் ஸ்ரீலசஷ்மி நாராயணி திருக்கோயில், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீநாராயணி திருக்கோயில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். மாலை 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மறுநாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வழக்கம்போல் கோயில் நடை பக்தா்களின் தரிசனத்துக்கு திறக்கப்படும் என ஸ்ரீ நாராயணி பீடத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.