சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்க...
கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!
புதுதில்லி: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி வெள்ளிக்கிழமையன்று, அனைத்து தவணைக் காலங்களிலும் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆட்டோ மற்றும் தனிநபர் உள்ளிட்ட பெரும்பாலான நுகர்வோர் கடன்களுக்கான வட்டி விகிதம், தற்போதுள்ள 9.55 சதவிகிதத்திற்கு நிகராக 9.45 சதவிகிதமாக இருக்கும் என்றது.
அதே வேளையில், ஒரு மாதம், மூன்று மாதம் மற்றும் ஆறு மாத தவணைக்கால விகிதம் 9.30 முதல் 9.45 சதவிகத வரம்பில் இருக்கும். எம்சிஎல்ஆர் தவணைக் காலத்திற்கான வட்டியை 9.25 சதவிகிதத்திலிருந்து 9.15 சதவிகிதமாக இருக்கும். வங்கியின் புதிய நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (எம்சிஎல்ஆர்) செப்டம்பர் 7 முதல் அமலுக்கு வரும்.
கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி அதன் முக்கிய கடன் விகிதத்தை 5.5 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!