செய்திகள் :

பாக். முன்னாள் பிரதமரின் சகோதரியின் மீது முட்டை வீச்சு!

post image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின், சகோதரி அலீமா கானின் மீது, 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர்.

பாகிஸ்தானின் தெஹ்ரிக் - இ - இன்சாஃப் கட்சியின் நிறுவனரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இம்ரான் கானின் மீதான வழக்குகளில் ஒன்றான டொஷாகானா வழக்கின் விசாரணைக்காக, இன்று (செப்.5) ராவல்பிண்டி சிறைக்கு வருகை தந்த அவரது சகோதரி அலீமா கான் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது, கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்த அலீமா கானின் மீது 2 பெண்கள் முட்டைகளை வீசியுள்ளனர். இதனால், அடியாலா சிறை வாசலில் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.

இதுகுறித்து, விடியோக்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன. இருப்பினும், தான் நலமாக உள்ளதாகக் கூறி அவர் அந்தச் சந்திப்பைத் தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“எங்கள் மீதான தாக்குதல்களை நாங்கள் கண்டுக்கொள்ள மாட்டோம். இப்படியொரு சம்பவம் நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

ஆனால், தொடர்ந்து பல கடுமையான கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டதாகவும், அவை எதற்கும் பதிலளிக்காமல் அலீமா கான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அலீமா கானின் மீதான தாக்குதல்களை எதிர்த்து இம்ரான் கானின் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது முட்டைகளை வீசிய பெண்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், அப்பெண்கள் இருவரும் இம்ரான் கானின் கட்சி ஆட்சி செய்யும், கைபர் பக்துன்குவா மாகாணத்தின் அரசு ஊழியர்கள் எனவும், சம்பளம் முறையாக வழங்காதது மற்றும் பிற முறைகேடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை அலீமா கான் புறக்கணித்ததால், அவர் மீது அப்பெண்கள் முட்டைகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

Two women threw eggs at Aleema Khan, the sister of former Pakistani Prime Minister Imran Khan.

சொத்து வரி விவகாரம்! பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜிநாமா!

சொத்து வரி விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இன்று (செப்.5) ராஜிநாமா செய்துள்ளார். பிரிட்டன் அரசின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர், சமீபத்தில் இங்கிலாந்தின... மேலும் பார்க்க

போர்ச்சுகலில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து- 16 பேர் பலி

போர்ச்சுகலில் ஃபுனிகுலர் கேபிள் கார் தடம்புரண்டதில் 16 பேர் பலியாகினர்.ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் புகழ்பெற்ற ஃபுனிகுலர் கேபிள் கார் வியாழக்கிழமை திடீரென தடம்புரண்டது. இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாக... மேலும் பார்க்க

இலங்கையில் பள்ளத்தில் கவிழ்ந்த பயணிகள் பேருந்து! 15 பேர் பலி!

இலங்கையில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பயணிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் அருகில் வெல்லவாயா பகுதியில் அமைந்துள்ள மலையின் மீது நேற்று (செப்.4) ... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை! பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கும் ரஷியா!

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தொடர்ந்து தட்டிக் கழித்து வந்த நிலையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் முதலீடு செய்ய டிரம்ப் வலியுறுத்தலா? அச்சுறுத்தலா?

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடு குறித்து அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டறிந்தார்.அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலானியா... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் பெயரைப் போர்த் துறையாக மாற்றும் நிர்வாகக் கோப்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திடவுள்ளார்.கடந்த மாதமே பாதுகாப்புத் துறையின் பெயரை மாற்றப் போவதாக ... மேலும் பார்க்க