எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை வ...
`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்!
பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர் பூவை செங்குட்டுவன்.
வயது மூப்புக் காரணமாக இன்று மாலை 5.45 மணியளவில் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 90.

பக்தி பாடல்களுக்காகப் பெரிதும் பெயர்போன பூவை செங்குட்டுவன் கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டவர்.
1000-க்கும் மேலான திரைப்படப் பாடல்கள், 4000-க்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்கள் எனத் தனது திரை வாழ்க்கையில் 5000-க்கும் மேலான பாடல்களை எழுதிய பெருமை இவருக்கு உண்டு.
பாடல்கள் எழுதுவதைத் தாண்டி திரைப்படங்களுக்கான, மேடை நாடகங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் எழுதும் திறன் கொண்டவர் இவர்.
'தாயிற் சிறந்த கோவிலுமில்லை', 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்', 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட பல முக்கியமான பக்தி பாடல்களையும், சினிமா பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.
'வாழ்க்கை எனும் நேர்கோடு' என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் சில தினங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது.

கலைமாமணி விருது, கண்ணதாசன் விருது, மகாகவி பாரதியார் விருது உள்ளிட்ட பல விருதுகளால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
இவருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் இருக்கிறார்கள். பூவை செங்குட்டுவனின் தங்கையின் கணவர்தான் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பூரிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூவை செங்குட்டுவனின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...