குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?
Madharaasi: "இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான்'' - 'மதராஸி' குறித்து சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்களுடன் ‘மதராஸி’ படத்தின் FDFS காட்சியைக் காண சென்னை சத்யம் திரையரங்கிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார்.
படம் பார்த்த பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "'மதராஸி' படத்திற்கான ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி.
எல்லோரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். படத்தில் எதிர்பார்த்த இடத்தில் எல்லாம் கை தட்டல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை இருக்கும். அதே மாதிரி எதிர்பார்த்த இடத்தில் எல்லாம் கைத்தட்டல் இருந்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

'GOAT' படத்தில் விஜய்யுடன் நடித்தது என்றும் நினைவில் இருக்கும். இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...