3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்ற...
தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு
தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், கல்வாவில் உள்ள கோலாய் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா(19). இவர் மும்பையில் உள்ள முலுண்டிலிருந்து ரயிலில் பயணம் செய்தபோது வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் ஓடையில் விழுந்ததாக தாணே மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவின் தலைவர் யாசின் தத்வி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாணே பேரிடர் மீட்புப் படையின் பணியாளர்கள் இரண்டு படகுகளுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்களும் பங்கேற்றனர். வியாழக்கிழமை மாலை 6:15 மணி வரை தேடுதல் தொடர்ந்தது. பின்னர் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தொடங்கியது.
போர்ச்சுகலில் கேபிள் கார் தடம்புரண்டு விபத்து- 16 பேர் பலி
இன்று மதியம் 12:30 மணிக்கு மீனவர்களால் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதிக நீர் ஓட்டம் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக தேடுதல் நடவடிக்கை தடைபட்டது என்றார். இச்சம்பவம் குறித்து போலீஸார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.