செய்திகள் :

Lokah: "இது சிறிய பட்ஜெட் திரைப்படம் என நினைக்கிறார்கள்; ஆனால்...." - துல்கர் சல்மான்

post image

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா' திரைப்படம்.

இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார்.

Lokah
Lokah

100 கோடி வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் எனப் பல்வேறு பகுதிகளில் படத்திற்கு சக்ஸஸ் மீட் நடத்தி வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சக்ஸஸ் மீட்டில் துல்கர் சல்மான் பேசுகையில், "என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இதுவரை 7 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறேன்.

'லோகா' படக்குழுவைப் போல மகிழ்ச்சி நிறைந்த குழுவை நான் இதுவரைப் பார்க்கவில்லை. அனைவருக்குமே ஸ்பெஷலான விஷயத்தைச் செய்துவிட வேண்டுமென்கிற ஆசை இருக்கும்.

நான் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஓரிரு முறைதான் சென்றிருக்கிறேன். இந்தக் குழு மீது முழு நம்பிக்கை நான் வைத்திருக்கிறேன்.

எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்திலேயே நஸ்லென் நடித்திருக்கிறார்.

Dulquer Salman
Dulquer Salman

அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அனைவரும் இது சிறிய பட்ஜெட் திரைப்படம் என நினைக்கிறார்கள்.

ஆனால், 'குரூப்', 'கிங் ஆஃப் கோதா' மாதிரியான திரைப்படங்களுக்கு எவ்வளவு செலவழித்தோமோ, அதேதான் இந்த சினிமாவிற்கும் செலவழித்திருக்கிறோம்.

எங்களுக்கு இது பெரிய பட்ஜெட் திரைப்படம்தான். பட்ஜெட், பணம் என்பதைத் தாண்டி எங்களுடைய கனவைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

நாங்கள் ஒரு ரூபாயைகூட வீணாக்கவில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்தக் குழுதான்." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokah: க்யூட்டான காதலி `டு' லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!

மலையாள திரைப்படங்கள் மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவது இது முதன்முறை அல்ல. ஆனால் அந்த வரிசையில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது லோகா சாப்டர் 1: சந... மேலும் பார்க்க

Lokah: அக்ஷய் குமார் டு பிரியங்கா சோப்ரா - 'பெண் சூப்பர் ஹீரோ'வைப் புகழும் பாலிவுட் நட்சத்திரங்கள்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ படமான லோகா சாப்டர் 1: சந்திரா திரையரங்குகளில் சாதனை படைத்துவருகிறது. பெண் மைய கதையான லோகாவில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். நாடுமுழுவதுமிருந்து இவருக்கு பாராட்ட... மேலும் பார்க்க

Mohanlal: "மோகன்லால் ஓர் அழகான பூக்கி; அவர் பூக்கி லால்!" - மாளவிகா மோகனன்

சத்யன் அந்திகாடு - மோகன்லால் கூட்டணி உருவாகியிருக்கும் 'ஹ்ருதயபூர்வம்' திரைப்படம் ஓணம் ஸ்பெஷலாக கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது. சங்கீத் பிரதாப், மாளவிகா மோகனன், சங்கீதா எனப் பலர் நடித்திருக்கும் இந... மேலும் பார்க்க

Lokah: வீடியோ காலில் வாழ்த்திய சூர்யா, ஜோதிகா - நஸ்லென் நெகிழ்ச்சி!

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம். இதில் சிறப்பான நடிப்புக்காக பாராட்டப்பட்டு வருகிறார் பிரேமலு புகழ் நஸ்லென்.இன்று சென்னையில்... மேலும் பார்க்க

Onam Releases Review: ஓணம் டிரீட்டாக திரைக்கு வந்திருக்கும் மலையாளப் படங்கள் எப்படி இருக்கிறது?

மலையாள சினிமாவுக்கு இந்த வாரம் ரொம்பவே ஸ்பெஷல் எனச் சொல்லலாம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடித்திருக்கும் 'லோகா - சாப்டர் 1: சந்திரா', ஃபகத் ஃபாஸில், கல்யாணி ப்ரி... மேலும் பார்க்க