தில்லியில்.. சட்டவிரோதமாக வசித்த 15 வெளிநாட்டினர் வெளியேற்றம்!
நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: இந்தூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா!
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் இந்தூரில் அவசரகமாக தரையிறக்கப்பட்டது.
161 பயணிகளுடன் தலைநகர் தில்லியிலிருந்து இந்தூரை நோக்கி ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு 'பான் - பான்' எச்சரிக்கையை விமானி விடுத்தார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!
பின்னர் விமானம் 20 நிமிடங்கள் தாமதமாக இந்தூரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. காலை 9:35 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 9:55 மணிக்கு தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
பான் - பான் எச்சரிக்கை என்பது உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் ஏற்படும் அவசர காலத்தில் விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.