இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!
இயக்குநர் ஹெச். வினோத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனநாயகன் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “ஜனநாயகன்”.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால், அவரது 69-வது படமான ஜனநாயகன்தான் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் நிலையில், வரும் 2026 பொங்கல் பண்டிகையின்போது இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்தத் திரைப்படத்தின் உருவாக்கம் விடியோவை (மேக்கிங்) படக்குழுவினர் இன்று (செப்.5, வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!