3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்ற...
ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!
லோகா திரைப்படம் குறித்து ஆலியா பட் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு செப்.4ஆம் தேதி வெளியானது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹ்ந்தி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் வசூலில் ரூ.101 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், பாலிவுட் நட்சத்திர நடிகை ஆலியா பட் கூறியதாவது:
கிராமத்து தொன்மைக் கதையையும் மர்மத்தையும் இணைத்து உருவாகிய புதிய கலவை! இந்தப் படத்துக்குக் கிடைக்கும் அன்பினால் மகிழ்ச்சி அடைகிறேன்.
சினிமாவில் இந்தமாதிரி படங்களுக்குதான் நான் எப்போதும் என் அன்பையும் ஆதரவையும் காட்ட ஆவலுடன் இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.