அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!
ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் வெளியீட்டுத் தேதி!
ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.
பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆசிப் அலி நடித்துவந்த மிராஜ் படத்தின் படப்பிடிப்பு 48 நாள்களில் நிறைவடைந்ததாக இயக்குநர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மிராஜ் படத்தின் தலைப்புக்கு கீழே ‘அருகில் வரும்போது மறைந்துவிடும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓணம் வாழ்த்துகளுடன் இந்தப் படம் வரும் செப்.19ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்துக்கு விஷ்ணு ஷ்யாம் இசையமைக்க, சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கெனவே பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ள ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.