செய்திகள் :

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

post image

யுஎஸ் ஓபன் ஒற்றையர் மகளிருக்கான அரையிறுதியில் சபலென்கா, அனிசிமோவா வென்றுள்ளார்கள்.

நடப்பு சாம்பியனான சபலென்காவை, அனிசிமோவா இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

பெலாரஸின் அரினா சபலென்கா அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவை 4-6, 6-3, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார்.

மற்றுமொரு அரையிறுதியில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, ஜப்பானின் நவோமி ஒசாகவை 6-7 (4), 7-6 (3), 6-3 என்ற செட்களில் வீழ்த்தினார்.

இதன்மூலம் நடப்பு சாம்பியனான சபலென்காவை வரும் செப்.7ஆம் தேதி அனிசிமோவா இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார்.

சபலென்காவுக்கு சவால்!

டென்னிஸ் தரவரிசையில் சபலென்கா முதலிடத்திலும் அனிசிமோவா ஒன்பதாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஒன்பது முறை மோதிக்கொள்ள, அன்சிமோவா 6 முறையும் சபலென்கா 3 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கும் சபலென்காவுக்கு இந்தமுறை கோப்பையை தக்கவைப்பது கடினமான சவாலாக இருக்கும்.

Sabalenka, Anisimova win US Open women's singles semifinals.

ரூ.50 கோடி வசூலைக் கடந்த ஹிருதயபூர்வம்!

மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது. இதய மாற்று... மேலும் பார்க்க

கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

சொந்த மண்ணில் கடைசி போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக 2 கோல்கள் அடித்தார். உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் கடைசிக்கு முந்தையை ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3-0 என வென்றது. தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.கண்ணப்பாதெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி ... மேலும் பார்க்க