ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை
சென்னை : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகியது வருத்தமளிப்பதாக தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடந்த 3 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள அமித்ஷாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. நல்ல முதல்வரை தோ்ந்தெடுப்பதற்காக டிசம்பா் 6-ஆம் தேதி அமமுக தொண்டா்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். அதாவது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பா் 6 ஆம் தேதி அதுகுறித்து முறைப்படி அறிவிப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகியது பாஜக தலைவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகல் முடிவு வருத்தமளிப்பதாகவும், பாஜக தலைவர்கள் அவர்களை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
டிடிவி தினகரனுடன் போனில் பேசியதாகவும், அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள் என்பதால், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
மேலும், விஜய்க்கு ஒரு கூட்டம் இருக்கிறது, எனவே அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறிய அண்ணாமலை, தாக்கம் என்பது வேறு, ஆட்சி அமைப்பது வேறு என்றும், அதிமுக பாஜக கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.