செய்திகள் :

தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்து

post image

தஞ்சாவூர்: அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சியை கொண்டுவர முடியும். இல்லையென்றால் முடியாது என்று தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது.

ஏனென்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இரண்டு பேரின் நல்ல மதிப்பை பெற்றவர் செங்கோட்டையன்.

கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொன்னதை மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்.

ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை.

அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம்போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள் நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள்.

அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை பத்து நாள்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு கொடுத்திருக்கிறார். அப்படி ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவிக்கிறேன்.

கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள் என வைத்தியலிங்கம் கூறினார்.

பிரிந்தவர்களை 10 நாள்களில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

Sengottaiyan has expressed the sentiments of AIADMK workers today, which is welcome....

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திருநெல்வேலி: நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிா்ணயிக்கும் உச்ச நீதிமன்றம் தனியாா் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிா்ணயித்துள்ளது? கல... மேலும் பார்க்க

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ... மேலும் பார்க்க

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி: நயினார் நாகேந்திரன்

அதிமுகவை ஒன்றிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அணைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.அதிமுக... மேலும் பார்க்க

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும் என லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படம் திறப்பு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது ப... மேலும் பார்க்க

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் நாளையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள்... மேலும் பார்க்க