குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?
நேபாளம்: Youtube, Facebook, Instagram, X உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கம் - காரணம் என்ன?
நேபாள அரசு Facebook, X, YouTube போன்ற பிரதான சமூக ஊடகங்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கூறியதன்படி, இரண்டு டஜன் சமூக வலைத்தள நிறுவனங்கள் தாமாக முன்வந்து அரசாங்கத்தில் பதிவு செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை பின்பற்றாதபட்சத்தில், அவை முடக்கப்படுகின்றன.
அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள TikTok, Viber மற்றும் மூன்று சமூக ஊடக தளங்கள் நேபாளத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
நேபாள நாடாளுமன்றம் சமூக தளங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதாகவும், பொறுப்பான முறையில் மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகவும் உறுதி செய்யும் வகையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, நிறுவனங்கள் அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்த நேபாளத்தில் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பான கருத்துகள் தெரிவித்தால், பல லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
உள்ளடக்கங்கள் உடனடியாக நீக்கப்படும்.
மேலும் சில விதிமுறைகள் கருத்து சுதந்திரத்திற்கு அபாயமாக இருக்கக்கூடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது ஒரு தணிக்கை கருவியாகவும், ஆன்லைனில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் நபர்களைத் தண்டிக்கவும் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது கருத்து சுதந்திரத்திற்கு தடையாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் தரப்பின் நிலைப்பாடு: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சட்டங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்றும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களும், நிர்வாகிப்பவர்களும் அவர்கள் பகிரும், வெளியிடும், கூறும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.