செய்திகள் :

இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு

post image

தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை மாவட்டம் கிழ பனங்காடியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கோழித்தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

பரவையில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள சுரேஷ் என்பவரின் கோழிப்பண்ணைக்கு கோழித்தீவனம் தயாரிக்கும் 13, 400 கிலோ குருணையை உரிய ஆவணங்களுடன் வாடகை வாகனத்தில் அனுப்பி வைத்தேன்.

கொடைரோடு டோல்கேட் அருகே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார்கள் வாகனத்தைச் சோதனை செய்துள்ளனர். டிரைவர் அனைத்து ஆவணங்களையும் காண்பித்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு, நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையளர் சுரேஷுக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் சுகுணா நேரில் வரச்சொல்லியுள்ளார்.

அவர் உடனே எனக்குத் தகவல் சொன்னதால் நான் உடனே இன்ஸ்பெக்டர் சுகுணாவைத் தொடர்புகொண்டு வாகனத்தில் உள்ளது கோழித்தீவனம் தயாரிக்கப் பயன்படும் குருணைதான் என்று விளக்கமாகக் கூறியபோது போனைத் துண்டித்துவிட்டார். பின்பு என்னைத் தொடர்பு கொண்டவர், 'மேலிட அழுத்தம் காரணமாக வழக்குப்பதிவு செய்தே ஆக வேண்டும், இந்த குருணையைக் கொள்முதல் செய்தவர், வாங்குகிறவர், டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கொள்கிறேன், உங்களை மட்டும் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ரூ 5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும்' என்றார்.

லஞ்சம்
லஞ்சம்

நான் உடனே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்குப் பேசினேன், அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா ரூபினியிடம் பேசச் சொன்னார்கள். உடனே அலுவலகத்துக்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினேன். பின்பு அவர்கள் சொன்னதுபோல் குடிமைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணாவை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர் பேசியதை ரிகார்ட் செய்து கொண்டு வந்து கொடுத்தேன். இதை ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை காவலரும் தெரியாமல் கண்காணித்தார்.

பிறகு இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் முதலில் ஒரு லட்சம் தருகிறேன், இரண்டு நாட்கள் கழித்து இரண்டு லட்சம் தருகிறேன் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியதுபோல் பேசியதையும் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா ரூபினியிடம் கொடுத்தபோது, 'சீரியல் எண்களைக் குறிக்க வேண்டும், அதனால் இன்ஸ்பெக்டருக்குப் பணம் கொடுக்க செல்லும் முன் எங்களிடம் பணத்தைக் கொடுத்து வாங்கி செல்லுங்கள்' என்று சொன்னதால் அதன்படியே கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஒரு லட்சத்தைக் கொடுத்தேன்.

ஆனால், அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் இல்லை, பின்பு போய் கேட்டதற்கு என்னிடம் ஒரு லட்சத்தைத் தந்துவிட்டு, 'உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டார்கள். அதனால் கவலைப்படாமல் செல்லுங்கள்' என்று கூற, நானும் நம்பிக்கையுடன் வந்துவிட்டேன். ஆனால், கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுக்காததால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் சுகுணா, டிரைவரை மிரட்டி வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து, ரேசன் அரிசி கடத்தியதாக என்னையும் குற்றவாளியாகச் சேர்த்துவிட்டார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

இன்ஸ்பெக்டர் சுகுணா லஞ்சம் கேட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்தப் பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென்று சில போலீசார் என் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர். எனவே இந்த வழக்கிலிருந்து என்னை விடுவித்தும், லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்துள்ள என் புகாரை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, இந்த மனுவிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பெட்ரோல் குண்டு வீச்சு, கடும் தாக்குதல்; பாமக மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய முயற்சியா?

பா.ம.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளவர் ம.க. ஸ்டாலின். இவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் பதவியில் உள்ளார். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியு... மேலும் பார்க்க

'கருவின் பாலினத்தைக் கண்டறிய ரூ.25,000' - புரோக்கரை மடக்கிப் பிடித்து சுகாதாரத்துறை; என்ன நடந்தது?

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கடலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு சட்டவிரோதமாக பாலினத்தைக் கண்டறிய அனுப்ப... மேலும் பார்க்க

`பொய்' பாலியல் புகார்; சிக்கவைத்த மாணவிகள்... 11 ஆண்டுகள் போராடி மீண்ட பேராசிரியர்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு பேராசிரியராக பணியாற்றியவர் ஆனந்த் விஸ்வநாதன். இவர் பொருளாதாரத்துறை துறைத்தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே பேராச... மேலும் பார்க்க

2வது மனைவி பிரிந்துசென்றதால் ஆத்திரம்; போதையில் குழந்தையைக் கொன்ற டெம்போ ஓட்டுநர்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு அபினவ் என்ற ஐந்து வயது மகன் இருந்தான்.சுந்தரலிங்கத்துக்கு செல்விக்கும் கருத்து வேறுபாடு ஏற... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை

தூத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீஸார் கண்காணித்து வ... மேலும் பார்க்க

`52 முறை துபாய் சென்று தங்கம் கடத்தல்' - நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்

கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்த கன்னட நடிகை ரன்யா ராவ், பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். அவர்மீது தற்போது வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்... மேலும் பார்க்க