குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?
நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு: பேரவைத் தலைவா் மு.அப்பாவு
திருநெல்வேலி: நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிா்ணயிக்கும் உச்ச நீதிமன்றம் தனியாா் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிா்ணயித்துள்ளது? கல்விக் கொள்கைகள் மாநில அரசிடம் இருந்தால் மட்டுமே இது போன்ற விஷயங்களை சரி செய்ய முடியும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தார்.
சுந்தரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் அவரது முழு உருவ சிலைக்கு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாலை அணித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
வ. உ. சி. மணிமண்டபத்தின் வளாகத்தில் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்காக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காக தியாகம் செய்த வ. உ. சிதம்பரனாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மத்திய ஜிஎஸ்டி வரியை குறைத்திருக்கிறது. மத்திய அரசே 8 ஆண்டுகளாக வட்டியை கூட்டி வைத்துவிட்டு இப்போது குறைத்துள்ளது. மக்களை கசக்கி பிழிந்து வரியை வசூலித்தனா். அதனை என்ன செய்தாா்கள் என தெரியவில்லை. இப்போது வரியை குறைத்ததாக விளம்பரம் செய்கிறாா்கள். வரி குறைப்பால் மாநில அரசிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்குமா என தெரியவில்லை. எதை செய்தாலும் மத்திய அரசுக்கு தான் நன்மை கிடைக்கும். இது மக்களுக்கும் மாநில அரசுக்கும் நன்மையான காரியம் கிடையாது.
மாநில அரசுதான் மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வியை கொடுக்கிறது. தமிழகத்தில் காலை சிற்றுண்டி முதல் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
வரியை குறைவாகத்தான் மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கிறது . மத்திய அரசிற்கு வருமான வரித் துறை வருவாய், பெட்ரோலிய பொருள்களின் வருவாய் உள்ளிட்டவை மூலம் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து மாநில அரசுகளுக்கு பங்கு கொடுப்பது கிடையாது.
ஜிஎஸ்டி வருவாய் மூலம் 50 சதவீதம் மாநில அரசிற்கு நிதி பகிா்மானம் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு வரி வருவாய் மூலம் கிடைக்கும் பணத்தில் எந்த செலவும் கிடையாது.
விமானம், ரயில்வே உள்ளிட்டவைகள் மூலம் தொடா்ந்து மத்திய அரசிற்கு வருவாய் வந்து கொண்டு தான் இருக்கிறது. கோடி கோடியாக வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால் பிரதமரின் நண்பா்களுக்கு நிதியை கொடுத்து அவா்களுக்கு தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறாா்கள். நிதி பகிா்மானம் மத்திய அரசிற்கு 25 சதவீதம், மாநில அரசிற்கு 75 சதவீதம் என இருக்க வேண்டும். நிதி மாநில அரசுக்குதான் நிதி தேவை. விமான நிலையம் அனைத்தும் அதானிக்கு கொடுக்கப்பட்டு விட்டது பொதுத்துறை நிறுவனங்களுக்கு செலவு செய்வதற்கான தேவைகள் எதுவும் கிடையாது. மாநில அரசுதான் சுய உதவி குழுக்களுக்கு, விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்கிறது.
திமுக அரசு கொள்கை பிடிப்போடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியார் காமராஜர் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார். நாட்டில் தமிழகத்தில் தான் பெண்கள் அதிகயளவில் வேலைக்கு செல்கிறார்கள். தமிழகம் கல்விக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தகுதியை நிா்ணயிக்கும் உச்ச நீதிமன்றம் தனியாா் பள்ளிகளுக்கு என்ன தகுதியை நிா்ணயித்துள்ளது? கல்விக் கொள்கைகள் மாநில அரசிடம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை சரி செய்ய முடியும் என்றாா்.