செய்திகள் :

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்

post image

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

வெற்றி வாகை சூடி நல்லாட்சியைத் தமிழகத்தில் தருவதற்கு அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும். இதனை விரைந்து செய்தால்தான் தேர்தல் களத்தை சந்திக்க முடியும். அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பிரசாரத்தில் பங்கேற்பேன். இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேனி மாவட்டம் போடியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிகையில், “சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக போடியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வருகிறார். அதிமுகவை வளர்ப்பதற்காக பாடுபட்டவர் செங்கோட்டையன்.

அதிமுகவில் சூறாவளி, சுனாமிகள் வந்தபோதும் இந்த இயக்கத்தில் நிலையாக நின்று அதிமுகவை வளர்ப்பதற்காக அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றவர் செங்கோட்டையன்.

அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், ஒருங்கிணைத்தால்தான் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர முடியும் என்று தனது மனதின் குரலாக ஒலித்து வருகிறார். அவருடையை எண்ணம், மனசாட்சி நிறைவேறுவதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நோக்கத்திற்காகத்தான் நாங்களும் போராடி வருகிறோம். அதிமுக சக்திகள் பிரிந்திருந்தால் வெற்றி பெற முடியாத என் சூழலில் உள்ளோம். இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம். இந்த இயக்கத்திலிருந்து தொண்டர்களை யாரும் வெளியேற்ற முடியாது.

எடப்பாடி பழனிசாமி எதற்காக சுற்றுப் பயணம் செய்கிறார் என்பது தெரியாது. அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்ற எண்ணத்தில் தனது கருத்துக்களையும் பங்களிப்பையும் செங்கோட்டையன் வழங்கி வருகிறார்.

அவரது கருத்துக்களின் முழுவடிவமே அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என யார் சொன்னாலும் அவர்களுக்கு உறுதுணையாக முழு ஒத்துழைப்பு வழங்குவோம். பக்கபலமாக இருப்போம்” என்றார் ஓ. பன்னீர்செல்வம்.

Full cooperation to those who unite AIADMK! - O. Panneerselvam

இதையும் படிக்க : இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000-ஐக் கடந்தது!

சென்னை: தங்கம் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.சென்னையில் காலை நேர நிலவரப்படி ஒரு கிராம்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் கெடு! இபிஎஸ் அவசர ஆலோசனை!

பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அ... மேலும் பார்க்க

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் மொத்தம் ரூ. 15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில், ஜொ்மனி, பிரிட்டன் நாட... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

திருநெல்வேலி: திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு முன்பு வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், தப்பியோடிய மர்ம கும... மேலும் பார்க்க

சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை மாணவா்களிடம் வளா்க்க வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவா்களிடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை ஆசிரியா்கள் வளா்க்க வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தின விழா சென்னை கோட்டூா்புர... மேலும் பார்க்க

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் தலை... மேலும் பார்க்க