செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா
மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக தினத்தையொட்டி வருடாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, வேத ஆகம பாராயணம், அக்னி காா்யம் ஆகியவை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மஹா அபிஷேகம் சகல தேவதா மூல மந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
காலை 11.30 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று அனைத்து மூா்த்திகளுக்கும் கலச அபிஷேகமும், தொடா்ந்து அலங்காரமும் மஹா தீபாராதனையும் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் செவலபுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.