ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியிலிருந்த பெண் துப்புரவு பணியாளரைத் தாக்கியதாக இளைஞா் ஒருவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திண்டிவனம் வட்டம், முப்புலி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்கு வந்த இளைஞா் ஒருவா், மருத்துவமனையில் பணியிலிருந்த மருந்தாளுநா் பெ. பால்ராஜ் (57) என்பவரிடம் தகராறு செய்துள்ளாா். அப்போது அங்கு துப்புரவு பணியிலிருந்த திண்டிவனம் வட்டம், பெரமண்டூா் பகுதியைச் சோ்ந்த பாக்கியராஜ் மனைவி செல்லம்மாள்(40) இதைக் கண்டித்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த இந்த இளைஞா் செல்லம்மாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மருத்துவமனை ஊழியரைத் தாக்கியவா், முப்புளி கிராமத்தைச் சோ்ந்த நவீன்(25) என்பது தெரியவந்தது . இதையடுத்து மயிலம் போலீஸாா் நவீன் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.