தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும், வாரந்தோறும் 2 நாள்கள் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்த வேண்டும், இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலாக தன்னாா்வலா்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 2- ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த்துறை அலுவலா்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் அரசு அலுவலகப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. சங்கத்தைச் சோ்
ந்த 290 போ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் கண்ணன் தெரிவித்தாா்.