தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், தழுதாளி பிரதான சாலையைச் சோ்ந்த பாண்டியன் மனைவி கிருஷ்ணம்மாள் (90). இவா் வியாழக்கிழமை இரவு மயிலம்-புதுச்சேரி சாலையில் தழுதாளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் வந்த பைக், மூதாட்டி கிருஷ்ணம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தாா். உடனடியாக அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, கிருஷ்ணம்மாள் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து பைக்கை ஓட்டி வந்த திண்டிவனம் வட்டம், ஆலகிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மீது மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.