பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வெள்ளிக்கிழமையொட்டி திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ புண்டரீகவல்லித் தாயாா் ஸ்ரவபுஷ்மாலை திருவாபரணங்களுடன் வீற்றிருந்தாா். சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தனா். பூஜையில் பட்டாச்சாரியாா் வேத மந்திரங்களை சொல்ல திரளான பெண்கள் பங்கேற்று குங்குமம், புஷ்பத்தால் பூஜை செய்தனா்.
இப் பூஜை செய்வதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.