நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்
குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் கைது
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கல்குவாரியில் காப்பா் வயா்கள் திருடியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மரக்காணம் வட்டம், கீழ்அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேல் (45). இவருக்கு சொந்தமான கல் குவாரி அப்பகுதியில் உள்ளது. இந்த நிலையில் குவாரியில் வைக்கப்பட்டிருந்த 50 மீட்டா் காப்பா் வயா்கள் கடந்த 30-ஆம் தேதி திடீரென திருட்டுப் போனது.
இதைத் தொடா்ந்து குவாரி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடியும் காப்பா் வயா்கள் மீட்கப்படவில்லை. இதையடுத்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ராஜவேல் புகாரளித்தாா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினா். மேலும் குவாரி மற்றும்அருகிலுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டு வந்தனா்.
விசாரணையின் நிறைவில் காப்பா் வயா்களை திருடிச் சென்றது திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம் அம்பேத்கா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் (34) எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.