செய்திகள் :

டிரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு! வரியைக் குறைக்குமா அமெரிக்கா?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்தை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

இதனை விமர்சித்த டிரம்ப், மூன்று பேரின் புகைப்படங்களையும் பகிர்ந்து இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக தோன்றுகிறது எனத் தெரிவித்திருந்தார்.

இதனைக் குறிப்பிட்டு, வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப், ”கண்டிப்பாக செய்வேன், மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். குறிப்பிட்ட நேரத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயானது சக்திவாய்ந்த உறவு, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.” எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு விடியோவை பகிர்ந்துள்ள மோடி, ”ட்ரம்ப்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த அவரது நேர்மறையான வெளிப்பாட்டையும் மிகவும் பாராட்டுகிறேன் மற்றும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்நோக்கு மிக்க விரிவான மற்றும் உலகளாவிய பயனுள்ள கூட்டாண்மையைக் கொண்டுள்ளன.” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், கடந்த சில நாள்களாக விரிசல் ஏற்பட்டிருந்த அமெரிக்க - இந்திய உறவு மீண்டும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாததாலும், எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததாலும் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் அறிவித்து அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Modi welcomes Trump's comment! Will the US reduce taxes?

இதையும் படிக்க : மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி... மேலும் பார்க்க

ஐ.நா. அமர்வை புறக்கணிக்கும் மோடி! ஜெய்சங்கர் பங்கேற்கிறார்!!

புது தில்லி: செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப்போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச... மேலும் பார்க்க

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நொய்டாவில் ஒருவர் கைது!

மும்பையில் குண்டிவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தப் போவதாக மிரட்டல் விடுத்தவரை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மும்பையில் கடந்த ஆகஸ்ட் 27 -ஆம் தேதி தொடங்கிய விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள், ச... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு ம... மேலும் பார்க்க

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற... மேலும் பார்க்க

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க