செய்திகள் :

2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..! மெஸ்ஸி பேட்டியால் சோகம்!

post image

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி தான் 2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் எனப் பேசியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய (செப்.5) தகுதிச் சுற்றுப் போட்டியில் வெனிசுலாவை 3-0 என ஆர்ஜென்டீனா வென்றது.

மெஸ்ஸி தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 2 கோல்கள் அடித்து அசத்தினார்.

ஒருநாள் ஓய்வுபெற்றுத்தான் ஆக வேண்டும்

இந்தப் போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி பேசியதாவது:

கடந்தகாலத்தில் நான் 39 வயதில் உலகக் கோப்பையில் விளையாடுவதில் கடினம் என தர்க்கரீதியாகக் கூறியிருந்தேன். இன்னும் அதற்கு 9 மாதங்கள் இருக்கின்றன. அது குறைவாக இருந்தாலும் நீண்ட காலம் என்பது எனக்குத் தெரியும்.

எனக்கு கால்பந்து விளையாடுவது பிடிக்கும். இது முடியவேக் கூடாது. ஆனால், எப்படியாகினும் அந்தக் கணம் வந்தே தீரூம். அது குறித்து நான் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். நேரம் வந்தால் அது நடந்தே தீரூம்.

ஃபிட்னஸ் குறித்து மெஸ்ஸி...

உடல்நிலை நன்றாக உணரும்போது, மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். நன்றாக இல்லாதபோது, கடினமாக உணர்கிறேன். அதற்குப் பதிலாக விளையாடாமலே இருக்கலாம் என நினைக்கிறேன்.

தற்போதைக்கு, ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். என்ன நடக்கிறதனெப் பார்ப்போம் என்றார்.

மொத்தமாக மெஸ்ஸி 879 கோல்கள், 389 அசிஸ்ட்டுகளைச் செய்துள்ளார்.

Argentina football team captain Messi's statement that he doubts he will play in the 2026 World Cup has caused sadness among fans.

குட்டி வீரப்பன், லோக்கல் புஷ்பா... கவனம் ஈர்க்கும் பிருத்விராஜ் பட டீசர்!

நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள விலயாத் புத்தா என்ற புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.ஊர்வசி தியேட்டர்ஸ், ஏவிஏ புரடக்‌... மேலும் பார்க்க

ஜோகோவிச்சைப் பழிதீர்த்த அல்கராஸ்..! பல சாதனைகள் முறியடிப்பு!

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் கார்லோஸ் அல்கராஸ் நேர் செட்களில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார். அல்கராஸ் தனது ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோக்கி முன்னோக்கி செல்கிறார். பழிதீர்த்த அல்கராஸ்அம... மேலும் பார்க்க

தணல் வெளியீட்டுத் தேதி!

நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.அன்னை ஃபிலிம் புரொடக்‌ஷன் எ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் பலப்பரீட்ச... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி உள்பட 6 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா். இதில் ஓபன் பிரிவில், வெள்ளை நிற காய்களுடன் களமாடிய ப... மேலும் பார்க்க