ஜப்பான்: பொது இடங்களில் வாசனை திரவியம் பயன்படுத்துவது அவமரியாதையா? - பின்னணி என்...
Mirai: "மதம் சார்ந்த படங்களிலேயே நடிக்கிறீர்களே?" - பத்திரிகையாளர்கள் கேள்விக்கு தேஜா சஜ்ஜா பதில்
தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் 'மிராய்'.
பான் இந்தியா மூவியாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்டம்பர் 5) மும்பையில் நடைபெற்று இருக்கிறது.

இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் தேஜா சஜ்ஜாவிடம், "'ஹனுமான்', 'மிராய்' எனத் தொடர்ந்து மதம் சார்ந்த படங்களில் நடிக்கிறீர்கள். நீங்கள் மத நம்பிக்கை கொண்ட நபரா?" என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், "காதல் கதைகள் மீண்டும் மீண்டும் எடுக்கப்படும்போது மக்கள் யாரும் கவலை தெரிவிப்பதில்லை. ஆனால், நம்முடைய தர்மத்தைப் பற்றி படம் எடுத்தால் மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.
இந்த நிலம் நம்முடைய தர்மத்திற்கானது. அப்படி இருக்கையில் அதனை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். 'மிராய்' படத்தில் அதிரடி, சாகசம் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன.

உண்மையில், நாங்கள் இளைய தலைமுறையினருக்கு நமது கலாசாரத்தைக் காட்டுகிறோம் என்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...