குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!
2026 உலகக் கோப்பை: முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ தேர்வு!
கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கு முதல் ஆப்பிரிக்க நாடாக மொராக்கோ அணி தேர்வாகியுள்ளது.
மொராக்கோ அணி நைஜீருடன் வென்றதன் மூலம் 2026 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.
மொராக்கோவிலுள்ள பிரின்ஸ் அப்துல்லா திடலில் நேற்று (செப்.5) இரவு நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மொராக்கோ அணி 5-0 என நைஜீரை வென்றது.
இந்தப் போட்டியில் 74 சதவிகித பந்தினை மொராக்கொ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 29, 38, 51, 69, 84-ஆவது நிமிஷங்களில் மொராக்கோ அணியினர் கோல் அடித்தார்கள்.
கடந்த 2022 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை மொராக்கோ அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் ஹகிமி இந்த அணியில்தான் இருக்கிறார்.