2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!
பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக் அவரது மிகச் சிறந்த ஆட்டங்களை பாகிஸ்தானுக்கு எதிராக வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 42 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 50.65 என்ற சராசரியை வைத்துள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியில் வீரேந்திர சேவாக் இடம்பெற்று விளையாடிய போட்டிகளில் இந்திய அணி அதிக முறை தோல்வியையே சந்தித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக சேவாக் இடம்பெற்று விளையாடிய போட்டிகளில் அணி 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால், 21 முறை தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: எப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைகிறோமோ அப்போதெல்லாம் என்னுடைய கவனம் சிதறிவிடும். என்னுடைய பொறுமையையும் இழந்துவிடுவேன். பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 2008 ஆம் ஆண்டு கராச்சியில் நடந்த போட்டியில், இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. அன்றைய தினம் நான் விரதத்தில் இருந்ததால் சாப்பிடவில்லை. சாப்பிடாமல் பசியுடன் விளையாட வேண்டியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக ரன்கள் குவித்தது எனது பசியைப் போக்க வேண்டியிருந்தது என்றார்.
வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் தொடங்குகிறது. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக அதன் முதல் போட்டியில் விளையாடுகிறது. செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது.
ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி விவரம்
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜித்தேஷ் சர்மா, அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
Former Indian cricketer Virender Sehwag has said that he will lose his patience if he loses the match against Pakistan.
இதையும் படிக்க: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆறுதல் வெற்றியை தடுத்த ஆப்கன் பந்துவீச்சாளர்!