செய்திகள் :

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

post image

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு என்பது சர்வாதிகார உச்சநிலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

கழகம் இணைய வேண்டும் என்பது அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதில் இருக்கிறது.

தலைவர் மீதும் அம்மா மீதும் கழகத்தின் மீதும் பாசம், பற்று கொண்டிக்கிற பொதுமக்களையும் புறந்தள்ளிவிட்டு, செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை.

உலகத்திலேயே கழகம் இணையக் கூடாது என்று சொல்லும் ஒரே நபர் யார்? கழகம் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படைத் தொண்டனின் அபயக் குரலாக இருக்கிறது. அதற்காகவே 10 நாள்கள் கெடுவையும் செங்கோட்டையன் கொடுத்திருக்கிறார்.

ஏன் கொடுத்தார்? கருத்து வேறுபாடு உடையவர்களெல்லாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும், கழகம் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் கெடு விடுத்தார். இதனை தவறு என்று யாரும் சொல்லவில்லை. சர்வாதிகார உச்சநிலைக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.

கழகத்தின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயல்பட்டவர்கள் மீதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கூறவில்லை.

50 ஆண்டுகால வரலாறும், 30 ஆண்டுகள் ஆட்சியும்செய்த அதிமுக, இன்று இந்த நிலையில் இருக்கிறது. தொடர்தோல்வி; இது தேவைதானா? நம்மிடம் கட்சியை ஜெயலலிதா எப்படி ஒப்படைத்தார்கள்? 10 நாள் பொறுத்திருந்து பார்ப்போம். ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் எழுச்சி நிகழ்கிறது. செங்கோட்டையனின் சபதம் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையோடுதான் இந்தக் களத்தில் இறங்குகிறோம் என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? - நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேற யார் காரணம்? என்பதற்கு பதிலளித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். முன்னதாக, மதுரையில் இன்று(செப். 6) செய்தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அத... மேலும் பார்க்க

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய வர்கள் ஆசிரியா்கள் தொடர்பான விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளில் பள்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு கிளம்பும்நிலையில், மற்றொரு புறம் கொண்டாடியும் வருகின்றனர்.அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக பல்வேற... மேலும் பார்க்க

10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது. அறிவிப்பில் சென்னை மெட்ரோ கூறுகையில், தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் ச... மேலும் பார்க்க

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(செப். 7) இரவு சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொன்னேரி ப... மேலும் பார்க்க