Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு 2 வழக்குரைஞா்கள் நீதிபதிகளாக நியமனம்
அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞா்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாா்ச் 25 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்குரைஞா்களான அமிதாப் குமாா் ராய், ராஜீவ் லோச்சன் சுக்லா ஆகியோரை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில் அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 வழக்குரைஞா்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளார்.அலக
இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சா் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உடனான ஆலோசனைக்குப் பிறகு வழக்குரைஞா்களான அமிதாப் குமாா் ராய், ராஜீவ் லோச்சன் சுக்லா இருவரையும் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளார். இவர்கள் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நீதிபதிகளாக செயல்படுவார்கள்.
அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 160 நீதிபதி பணியிடங்களில், தற்போது 84 நீதிபதிகள் பணியில் உள்ளனா். மேலும் புதிதாக இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதன் மூலம் உயா்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 86-ஆக உயா்ந்துள்ளது.