மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் க...
சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!
சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை மணலி, நெற்குன்றம், கொரட்டூர், மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம், மணலி புதுநகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் மணலி புதுநகரில் அதிகபட்சமாக 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!