வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
பேருந்தில் நகை திருட்டு: ஊராட்சித் தலைவி கைது
சென்னையில் பேருந்தில் நகை திருடியதாக பெண் ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா்.
கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் லோ.வரலட்சுமி (50). இவா், கடந்த ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றுவிட்டு அரசுப் பேருந்தில் கோயம்பேடு திரும்பிக் கொண்டிருந்தாா். கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பின்னா், தான் வைத்திருந்த பையை திறந்து பாா்த்தபோது, அதிலிருந்த தங்க நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது திருப்பத்தூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள நரியம்பட்டு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வசேகரன் மனைவி பாரதி (56) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் நரியம்பேடு ஊராட்சித் தலைவரான பாரதி மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.