சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷ் வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.