பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்
அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து சத்யாபாமா நீக்கம்! இபிஎஸ் அதிரடி!
அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்கு சத்தியபாமா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அவரைக் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சத்தியபாமா வகித்துவந்த அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிரணி செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
இன்று(செப். 7) கோபி செட்டிபாளையம் அதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்களது ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.
அப்போது முன்னாள் எம்பி சத்தியபாமா “செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளேன். எதற்கும் தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: எனக்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறாரா? டிடிவி தினகரன் விளக்கம்!