செய்திகள் :

பிக்பாஸ் 19: போட்டியில் பங்கேற்ற நடிகையின் கதையை கேட்டு கண் கலங்கிய சல்மான் கான்

post image

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். தற்போது பிக்பாஸ் 19வது பருவம் நடந்து வருகிறது. இதில் நடிகை குனிக்கா சதானந்த் கலந்து கொண்டுள்ளார்.

மற்றொரு போட்டியாளர் பர்ஹானா, நடிகை குனிக்கா சதானந்த்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து, குனிக்காவின் மகன் அயானையும் நடிகர் சல்மான் கான் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார். அயானை போட்டியாளர் பர்ஹானாவுடன் பேச சல்மான் கான் அனுமதித்தார்.

அயான் தனது தாயாரிடம் கூறியதைப் படிப்படியாகச் சொல்லும்போது:
"ஒட்டுமொத்த இந்தியாவும் இதை பார்த்துக்கொண்டிருக்கிறது. வீட்டில் உங்களது பேரன், மருமகள், மூத்த மகன் உட்பட அனைவரும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம். நான் இந்த அளவுக்கு இருப்பதற்கு முழு காரணம் நீங்கள் தான்."

அயான் தனது தாயரிடம் கூறியதைப் படிப்படியாகச் சொல்லும்போது:
"நான் உங்களை தாயாக பெற்றதற்கு இந்த உலகில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நீங்கள் மிகவும் வலிமையானவர், அம்மா.

முதலில் உங்களது தந்தைக்காக வாழ்ந்தீர்கள், அதன் பிறகு கணவருக்காகவும், பின்னர் குழந்தைகளுக்காகவும் வாழ்ந்தீர்கள். உங்களுக்கு 62 வயதாகிவிட்டதால், உங்களுக்காக வாழ்வதற்கான நேரம் இது," என்று தெரிவித்தார்.

அயான் தனது தாயாரின் இளமை கால கஷ்டங்களை விவரிக்கும்போது:
"எனது தாயார் தனது 17 வயதில் தனது அப்பாவிடம், 'நான் இவரை காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்யப்போகிறேன்,' என்று தெரிவித்து அவரை திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமணம் நீடிக்கவில்லை.

மலைப்பகுதிக்கு சென்றபோது அவரது மகனை யாரோ கடத்தி சென்றுவிட்டனர். அதன் பிறகு மகனை தனது கட்டுப்பாட்டில் எடுக்க மிகவும் போராடினார். இதற்காக திரைப்படத்துறையில் பணம் சம்பாதித்தார்.

சல்மான் கான்

அந்த பணத்தில் மும்பை மற்றும் டெல்லி இடையேயாக சென்று எனது சகோதரனை சந்தித்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு, எனது மூத்த சகோதரன் எனது தாயாரிடம் வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு எனது தாயார் மீண்டும் திருமணம் செய்தார். ஆனால் அது நிலைத்து நிற்கவில்லை," என்று கூறினார்.

இதையடுத்து, அயான் அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த குனிக்காவும் அழுதார். அவர்களின் கண்ணீரை பார்த்த சல்மான் கானும் கண் கலங்கினார்.

அவர் கண்ணீரை துடைத்த காட்சி வைரலானது. இதையடுத்து, போட்டியாளர்கள் ஒருவரின் கஷ்டங்களை புறக்கணிக்க கூடாது என்று சல்மான் கான் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கொல்கத்தா: காபி கப்களில் சித்திரங்கள்; வாடிக்கையாளர்களை ஈர்க்கும் தெருவோர வியாபாரி!

கொல்கத்தாவின் டோலிகஞ்ச் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு தெருவோர வியாபாரி, ஸ்டார்பக்ஸ் பாணியில் தனித்துவமாக காபி பரிமாறுகிறார். வாடிக்கையாளரின் பெயரை கோப்பையில் எழுதுவதற்கு பதிலாக, அவர்களின் முகத்தை க... மேலும் பார்க்க

ஜப்பான்: பொது இடங்களில் வாசனை திரவியம் பயன்படுத்துவது அவமரியாதையா? - பின்னணி என்ன?

ஜப்பானில் சமூகத்தில் பெரிதாக பேசப்படும் ஒரு தனிப்பட்ட விஷயம் தான் “Smell Harassment” அல்லது “ஸுமேஹாரா”. இது ஒருவரின் உடல் வாசனை, அதிகமாகப் பயன்படுத்தப்படும் பர்ப்யூம், புகையிலை புகை, விலங்குகள் அல்லது... மேலும் பார்க்க

இத்தாலி: மனைவிகளின் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்த ஆண்கள் குழு; சிக்கியது எப்படி?

ஒரு ரகசிய பேஸ்புக் குழுவை அமைத்து அதில் பெண்களின் ஆபாசப் படங்களை அந்தக் குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் பகிர்ந்து வந்துள்ளனர். 2019 முதல் செயல்பட்டு வரும் இந்தக் குழு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப... மேலும் பார்க்க

”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள் என்ன?

மனைவிகளின் பேச்சைக் கேட்கும் கணவர்கள் அந்தத் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.திருமணம் என்றால் ... மேலும் பார்க்க

1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?

டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ... மேலும் பார்க்க

மும்பை: வாட்ஸ்அப் மிரட்டல்; கணபதி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்? - உஷார் நிலையில் போலீஸ்!

மும்பையில் நாளை விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான நாளை ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே 7வது நாளில் ஆயிரக்கணக... மேலும் பார்க்க