செய்திகள் :

1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?

post image

டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் முதல் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளது.

இந்த பங்களாவின் தற்போதைய உரிமையாளர்களான ராஜ்குமாரி கக்கர் மற்றும் பினா ராணி, ராஜஸ்தானின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் ₹1,400 கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தொழிலதிபர் ஒருவருக்கு ₹1,100 கோடிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லூட்டியன்ஸ் என்பவரால் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இங்கு 3,000 பங்களாக்கள் உள்ளன, அதில் 600 மட்டுமே தனியார் உரிமையில் உள்ளன, மற்றவை அரசு இல்லங்கள் மற்றும் தூதரகங்களாக உள்ளன.

இந்த விற்பனை இறுதியாகி விட்டால் இது இந்தியாவின் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய வரலாறு படைக்கும் என்று கூறப்படுகிறது.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

மும்பை: வாட்ஸ்அப் மிரட்டல்; கணபதி விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்? - உஷார் நிலையில் போலீஸ்!

மும்பையில் நாளை விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான நாளை ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே 7வது நாளில் ஆயிரக்கணக... மேலும் பார்க்க

'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்!

ஆக்ஸ்போர்டு டிக்ஷனரில கூட வருஷத்துக்கு நாலு முறை தான் வேர்ட்ஸ் சேக்குறாங்க... ஆனா நம்ம ஜென்சி கிட்ஸ் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறாங்க.. இன்ஸ்டா, ஃபேஸ்புக், செலிபிரிட்டி இன... மேலும் பார்க்க

17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையான மும்பை தாதா அருண்காவ்லி.

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தவர் அருண் காவ்லி. மும்பையில் தற்போது மாபியா கும்பல்கள் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அருண் காவ்லி உட்பட ஒரு சில கிரிமி... மேலும் பார்க்க

சாக்லேட்டில் வடிவமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிற்பம்; 7 நாள்கள் உழைத்து தயாரித்த மாணவர்கள் குழு!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கி... மேலும் பார்க்க

`வேலை, திருமண வாழ்வு வேண்டாம்..!' - கப்பலில் வாழ்ந்து வரும் பெண்; வருமானம் எப்படி வருகிறது தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த லின்னெல் என்பவர் Poverty to Paradise என்ற யூடியூப் சேனலை உருவாக்கி, தான் வாழும் கப்பல் அனுபவங்கள் குறித்து அதில் பதிவிட்டு வருகிறார். 2024 ஆம் ஆண்டில் அவர் பலவிதமான நெருக்கடிகளை சந... மேலும் பார்க்க