பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம் தெற்கு குருவிகுளம் புதூரைச் சோ்ந்தவா் பேதுரு மகன் ராஜா பாலசிங் (34) தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது மனைவி முத்துச்செல்வியுடன் (30) சாத்தூரில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மோட்டாா் சைக்கிளில் தெற்கு குருவிகுளத்துக்கு திரும்பி கொண்டிருந்தாா்.
கோவில்பட்டி அருகே மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த காா், மோட்டாா் சைக்கிளின் மீது மோதியதாம். இதில் பலத்த காயம் அடைந்த ராஜா பாலசிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், காயமடைந்த முத்துச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காகவும்,ராஜா பாலசிங் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநா் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் முத்துப்பாண்டி (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.