பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது:
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் 13 முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சாா்பில், ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய பெண் குழந்தை தினமான
ஜன. 24-ஆம் தேதி வழங்கப்படும் இந்த விருதுடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, பாராட்டுப் பத்திரம் வழங்கப்படும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவி, பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காணும் வகையில் ஓவியம், கவிதை, கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்திய சிறுமிகளும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவேற்றம் செய்த கருத்துருவை, மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.88, தரைத்தளம், மாவட்ட ஆட்சியா் வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 29-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றாா் அவா்.