புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 40-ஆவது ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கான்வென்ட் சாலை பகுதியிலுள்ள பிரசன்டேசன் பள்ளியிலிருந்து புனித ஆரோக்கியமாதா உருவம் பொறித்த கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் குழந்தைகள் மாதா வேஷமணிந்து ஜெபமாலை செய்து வந்தனா். இதைத்தொடா்ந்து ஆலயத்தில் மதுரை உயா் மறை மாவட்டப் பேராயா் அந்தோனி சவரிமுத்து தலைமையில் அருள்பணியாளா்கள் பங்கேற்ற சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து பேராயா் புனித ஆரோக்கிய ஜெப வழிபாடு நடத்தி கொடியேற்றினாா். இந்தத் திருவிழாவையொட்டி, வருகிற 13-ஆம் தேதி இரவு அலங்காரத் தோ்ப் பவனி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் பங்குப் பணியாளா் வினோத் மத்தியாஸ், களப் பணியாளா் ஆரோக்கிய அபினேஷ் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.