செய்திகள் :

காந்தி கண்ணாடி: "பாலா சிரித்தால் மக்கள் சிரிக்கிறார்கள்; அழுதால் அழுகிறார்கள்" - நெகிழும் லாரன்ஸ்

post image

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.

தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படம் நேற்று ( செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை நேற்று வடபழனி கமலா தியேட்டரில், நடிகர் பாலா உள்ளிட்ட படக் குழுவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் பார்த்தார்.

காந்தி கண்ணாடி | Gandhi Kannadi
காந்தி கண்ணாடி | Gandhi Kannadi

அதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நடிகர் லாரன்ஸ், ``நான் ஹீரோவாக ஜெயிக்கும் போது எவ்வளவு பதட்டமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததோ அந்த அளவிற்குச் சந்தோஷமும், பதட்டமும் இருக்கிறது.

நடிகராக பாலா பெரிதாக ஜெயித்து விட்டார். நான் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே என் நண்பர்கள் சிலர் என்னை செல்போனில் அழைத்து, 'படம் சூப்பரா இருக்கு உன் தம்பி படம் வெற்றி' என்றெல்லாம் பாராட்டிப் பேசினார்கள்.

எல்லாவற்றையும் அமைதியா கேட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் படம் மிகவும் எமோஷனலான படம்.

ஒரு காமெடி ஷோவில் பாலாவிடம் 'உன் ஆசை என்ன?' எனக் கேட்டேன். 'எனக்கு ஹீரோ ஆக வேண்டும்' என்றார். 'நீ நிஜமாகவே சொல்கிறாயா? அல்லது காமெடி செய்கிறாயா?' என மீண்டும் கேட்டபோதும், அவர் உறுதியாகச் சொன்னார். 'நிஜமாகவே நான் ஹீரோ ஆக வேண்டும்' என்றார்.

இப்போது இந்தப் படத்தின் மூலமாக பாலா ஹீரோவாகியிருக்கிறார். நான் இந்தப் படத்தை தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து பார்த்தேன்.

பாலா சிரிக்கும்போது மக்களும் சிரிக்கிறார்கள். பாலா அழுதால் மக்களும் அழுகிறார்கள். பாலா சண்டை போடும்போது எல்லோரும் கை தட்டுகிறார்கள். உண்மையில் பாலாவை மக்கள் ஹீரோவாக்கிவிட்டார்கள்.

KPY பாலா படம்
KPY பாலா படம்

இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் கடைசி 20 நிமிடத்தில் எல்லோரையும் எமோஷனல் ஆக்கிவிட்டார். இயக்குநருக்கும் பெரிய பாராட்டுகள்.

இந்த இயக்குநர் தமிழ் திரையுலகத்திற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம்.

இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன் என்றபோதும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தானே முன்வந்து படத்தைச் சிறப்பாகத் தயாரித்திருக்கிறார். அதற்கு நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக பாலா நன்றாக இருந்தால், நிறைய குடும்பம் நன்றாக இருக்கும். பாலா பெரிய நடிகனாக தமிழ் சினிமாவில் நிலைப்பான்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

காந்தி கண்ணாடி: "என் படத்துக்கு பேனர் வைக்க, போஸ்டர் ஒட்ட விடல; அதனால" - KPY பாலா என்ன சொல்கிறார்?

`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹ... மேலும் பார்க்க

கவிஞர் பூவை செங்குட்டுவன் மறைவு: "நாத்திகர்களும் விரும்பிக்கேட்ட நல்ல பாட்டு" - வைரமுத்து இரங்கல்

கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன் வயது (90) மூப்பின் காரணமாக நேற்று (செப்டம்பர் 5) மாலை காலமானார்.1967 முதல் பாடல்கள் எழுதி வந்த இவர், பக்தி பாடல்கள், ஆயிரக்கணக்கான திரைப்படப் பா... மேலும் பார்க்க

What to watch - Theatre & OTT: மதராஸி, Bad Girl, Conjuring, காந்தி கண்ணாடி; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

மதராஸி (தமிழ்)மதராஸிஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது த... மேலும் பார்க்க

`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்!

பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர் பூவை செங்குட்டுவன். வயது மூப்புக் காரணமாக இன்று மாலை 5.45 மணியளவில் இயற்கை... மேலும் பார்க்க