செய்திகள் :

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்

post image

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது மற்றும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். அண்ணாமலைதான், பாஜகவுடன் அமமுகவை கூட்டணி அமைக்க முழு முயற்சி எடுத்தவர். அவரால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம், ஒன்றாக செயல்பட்டோம். அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கொண்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது குறித்து நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாகக் கையாளத் தெரியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. மூப்பனார் நினைவிட நிகழ்ச்சிக்கு ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்திருந்தாரே தவிர, வேறு யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேஜ கூட்டணியில் அமமுக மீண்டும் இணைய வேண்டும் என்றால், ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். அது என்னவென்றால், எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள் என பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக நிபந்தனை விதித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

தினகரன் பேசும்போது, அண்ணன் பழனிசாமி என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமி அண்ணன்தான் என்று பதிலளித்தார்.

நான் பிரதீப் ஜான் கிடையாது; செங்கோட்டையன் கெடு குறித்து டிடிவி தினகரன் பதில்

நான் பிரதீப் ஜான் கிடையாது, செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெறுமா எனறு கணித்துச் சொல்வதற்கு என அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறுவதாக டிடி... மேலும் பார்க்க

பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்கு!

பணமதிப்பிழப்பு சமயத்தில் ரூ. 450 கோடி நோட்டுகள் மூலம் அதிமுக முன்னாள் பொதுச் செயலர் சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த சர்க்கரை ஆலையின் நிர்வாகிகள் மீது மத்திய குற்றப்புலனாய்வ... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை வருகிற செப். 13 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைப... மேலும் பார்க்க

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

சென்னை சென்டிரல் - ஆவடி இடையே ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, ஆவடி ரயில் நிலையம் வரை பயணிகள் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரயில்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள்... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000-ஐக் கடந்தது!

சென்னை: தங்கம் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.சென்னையில் காலை நேர நிலவரப்படி ஒரு கிராம்... மேலும் பார்க்க